கனடாவில் புதிய கார் கொள்வனவு செய்வோருக்கான தகவல்
கனடாவில் புதிய கார்களின் விலைகள் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குதறிப்பாக புதிய கார் ஒன்றின் சராசரி விலை 66000 டொலர்களைக் கடந்துள்ளதாக ஒடோடிரேடர் Autotrader.ca என்ற இணைய தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
காரின் விலை அதிகரிப்பினால் அதிகளவான கொள்வானவர்கள் கடன் பெற்றுக்கொள்வதாகவும் வட்டி விகிதம் அதிகம் என்பதனால் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது சராசரி கடன் வட்டி விகிதம் 7 சதவீதமாக காணப்படுகின்றது.
எனினும், மோசமான கடன் மதிப்பீடு உள்ளவர்களுக்கு இன்னும் அதிக வட்டி விகிதம் செலுத்த வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடன் பெற்றுக்கொண்டு கார் கொள்வனவு செய்வோர் பொருளாதார ரீதியான நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக வருமானங்கள் வரையறுக்கப்பட்டவர்கள் இந்த நெருக்கடிளை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கார் கொள்வனவு செய்த சிலர் தற்பொழுது கடன் பொறியில் சிக்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.