மிஸ்ஸிசாகுவாவில் கடுமையான வெள்ளம்
கனடாவின் மிஸ்ஸிசாகுவா பகுதியில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
வெள்ள நிலைமைகள் காரணமாக அநேகமான பாதைகள் மூடப்பட்டுள்ளதாக பீல் பிராந்திய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மிஸ்ஸிசாகுவாவின் லேக்ஸோர் வீதியில் இடுப்பு அளவில் நீர் காணப்படுவதாக பொலிஸார் டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.
வாகனங்கள் நீரில் மூழ்கியிருப்பது குறித்த காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.
வெள்ளப்பெருக்கினால் இதுவரையில் உயிர்ச் சேதங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
வெள்ள நீர் நிரம்பி வழியும் பகுதிகளை பயன்படுத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கார்கள் நீரில் மூழ்கிய நிலையில் சிக்கியிருந்த இருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
நகரின் பிரதான நீர் விநியோக குழாயில் ஏற்பட்ட நீர்க் கசிவு காரணமாகவே இவ்வாறு வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.