விளையாடிக் கொண்டிருந்த போதே உயிரிழந்த கிரிக்கெட் வீரர்
பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான ஜுனைத் ஜாபர் கான் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
அதிக வெப்பநிலையில் விளையாடியதன் காரணத்தினால் அவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடாத இவர் உள்ளூர் கிரிக்கெட்டில் மாத்திரம் விளையாடி வந்தார்.
இந்தநிலையில் அவுஸ்திரேலியாவின் அடிலெய்டில் விளையாடிக் கொண்டிருந்த போது வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததால் ஜுனைத் ஜாபர் திடீரென மைதானத்தில் மயங்கி விழுந்துள்ளார்.
இதனையடுத்து அவருக்கு உடனடியாக முதலுதவி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் மைதானத்திலேயே உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.