பிரான்ஸில் குளிர் காலத்தில் மக்களுக்கு ஏற்படவுள்ள நெருக்கடி!
பிரான்ஸில் ஏற்பட்டுள்ள எரிபொருள், எரிவாயு நெருக்கடி காரணமாக குளிர்காலத்தில் மின் தடை ஏற்பட வேண்டிய கட்டாயத்திற்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் குளிர்காலத்தில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் மின்வெட்டால் பாதிக்கப்படலாம் எனவும், ரயில் இரத்து செய்யப்படுவதுடன், பாடசலைகள் மூடப்படும் சாத்தியங்கள் உள்ளதென அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மின்தடையை இரண்டு மணி நேரமாக மட்டுப்படுத்தல், நாடு முழுவதும் திடீர் மின் தடைகள், குடும்பம் ஒன்று தொடர்ச்சியாக இரண்டு முறை பாதிக்காத வகையில் நடவடிக்கை, மின் தடை அமுல்படுத்த குறைந்த பட்சம் ஒரு நாள் முன்னர் முன்னறிப்பு செய்தல், முழு மாவட்டத்திலும் ஒரு நேரத்தில் மின் ஏற்படுத்தாமை, காலை 8 மணி, பிற்பகல் ஒரு மணி, மாலை 6 மணி மற்றும் இரவு 8 மணி ஆகிய நேரங்களில் மின் தடை அமுல்படுத்தல் போன்ற தீர்மானங்கள் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.