ரொனல்டோவின் அதிரடி அறிவிப்பு
உலகின் முன்னணி கால்பந்தாட்ட வீரர்களில் ஓருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) தனது பிரகாசமான விளையாட்டு வாழ்க்கைக்கு விரைவில் முடிவு கட்டவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
40 வயதான ரொனால்டோ, “இது கடினமான முடிவு, ஆனால் நான் இதற்கான தயாரிப்பை பல ஆண்டுகளாக செய்து வருகிறேன்” என கூறியுள்ளார்.
அல் நஸ்ர் (Al Nassr) அணிக்காக தற்போது விளையாடி வரும் ரொனால்டோ, கழக மற்றும் நாட்டுக்காக மொத்தம் 952 கோல்கள் அடித்துள்ள சாதனையாளர்.

ஓய்வு பற்றிய கருத்துக்கள்
கடந்த மாதம் அவர், 1,000 கோல் என்ற இலக்கை அடைந்து ஓய்வெடுப்பேன் என தெரிவித்திருந்தார்.
அண்மையில் நேர்காணல் ஒன்றில் ஓய்வு பற்றிய கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
விரைவில் (Soon) ஓய்வு பெறுவேன். அதற்குத் தயாராகி விட்டேன். இது மிகவும், மிகவும் கடினமானது. ஆனால் நான் 25 வயதிலிருந்தே என் எதிர்காலத்துக்கான திட்டமிடலை செய்து வருகிறேன்.அதனால் இதை எதிர்கொள்ள முடியும் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
கால்பந்தில் கோல் அடிக்கும் அந்த உணர்வுடன் எதுவும் ஒப்பிட முடியாது. ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு தொடக்கம் இருக்கிறது, ஒரு முடிவும் இருக்கிறது. இப்போது எனக்கும் என் குடும்பத்திற்கும், குழந்தைகளின் வளர்ச்சிக்கும் அதிக நேரம் ஒதுக்க விரும்புகிறேன் என மேலும் தெரிவித்துள்ளார்.