குரோஷியா முதியோா் இல்லத்தில் துப்பாக்கிச் சூடு ; 6 பேர் உயிரிழப்பு
தென் மத்திய ஐரோப்பிய நாடான குரோஷியாவிலுள்ள முதியோா் இல்லம் ஒன்றில் முன்னாள் இராணுவ வீரா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அவரது தாய் உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதில் உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் 80 மற்றும் 90 வயதுக்குட்பட்டவர்களாவார். துப்பாகிச்சூடு நடத்திய முன்னாள் இராணுவ வீரரின் தாய் 10 வருடங்களாக முதியோர் இல்லத்தில் வசித்து வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சரமாரியாக துப்பாக்கி சூடு
டாருவா் நகரிலுள்ள முதியோா் இல்லத்திற்கு திங்கட்கிழமை வந்த முன்னாள் இராணுவ வீரா் , அங்கிருந்தவா்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூட்டை மேற்கொண்டுள்ளார்.
இதில், இல்லத்தில் தங்கியிருந்த 5 பேரும் இல்லப் பணியாளா் ஒருவரும் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்தனா்.
தாக்குதல் நடத்திய முன்னாள் இராணுவ வீரா் அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்ற நிலையில், அவரை அருகிலுள்ள உணவகத்தில் வைத்து பொலிஸார் கைது செய்ததுடன் அவரிடமிருந்து பதிவு செய்யப்படாத துப்பாக்கி கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
மேலும் தாக்குதலுக்கான நோக்கம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனா்.
அதேவேளை துப்பாக்கிச்சூடு நடத்தியவா் முன்னாள் இராணுவ வீரா் 1973-இல் பிறந்தவர் என்றும், குரோஷியாவில் கடந்த 1991-95-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற போரில் பங்கேற்றதாகவும் உள்ளூா் ஊடகங்கள் தெரிவித்தன.