கடற்கரை ஒன்றில் திடீரென்று காணப்பட்ட ஆயிரக்கணக்கான முதலைகள்: அச்சத்தில் மக்கள்
பிரேசில் நாட்டில் கடற்கரை ஒன்றில் திடீரென்று ஆயிரக்கணக்கான முதலைகள் காணப்பட்ட நிலையில், உள்ளூர் மக்கள் பைபிள் தீர்க்கதரிசனம் நிறைவேறுகிறதா என அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமூக ஊடகத்தில் வெளியான அந்த காணொளியில், கடற்கரையில் ஆயிரக்கணக்கான முதலைகள் காணப்படுகிறது. பல மில்லியன் பார்வையாளர் இதுவரை அந்த காணொளியை பார்த்துள்ளனர்.
அதில் ஒருவர் பருவநிலை மாற்றம் காரணமாக முதலைகள் கரையில் திரண்டுள்ளனவா என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். இருப்பினும், உண்மையில் இவ்வாறான ஒரு கடற்கரை இருக்கிறதா? இந்த காணொளியில் இருப்பது போன்று முதலைகள் கரை ஒதுங்கியுள்ளனவா என கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்கு ஒருவர் அளித்த பதிலில், இவை யாக்கரே கெய்மன் வகை முதலைகள் எனவும் வெயில் காலத்தில் அதிகமாக கரையில் காணப்படும் எனவும் விளக்கமளித்துள்ளார்.
மேலும், இது ஒன்றும் கடற்கரை அல்ல எனவும், பொதுமக்கள் நடமாட்டமற்ற பகுதி எனவும் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது ஒன்று உள்ளூர் மக்கள் பயப்படும் அளவுக்கு முதலைகளின் படையெடுப்பு அல்ல எனவும், பைபிள் தீர்க்கதரிசன் என கூறப்படுவது வெறும் ஏமாற்றுவேலை எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.