காதலனுடன் சேர்ந்து 4 வயது மகனுக்கு தாய் செய்த கொடூரம்! பகீர் சம்பவம்
கேரளாவில் காதலனுடன் சேர்ந்து 4 வயது மகனின் காலை அடுப்பில் வைத்து காயம் ஏற்படுத்திய கொடூர தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அட்டப்பாடி மலை கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் ரஞ்சிதா தம்பதியினர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த நிலையில் அவர்களது மூத்த மகனை சுப்பிரமணியனும் இளைய மகனை ரஞ்சிதாவும் கவனித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் ரஞ்சிதா காதலன் உண்ணிகிருஷ்ணன் வீட்டில் தங்கியுள்ள நிலையில் தனது இளைய மகனின் காலை கேஸ் ஸ்டவ்வில் வைத்து ரஞ்சிதா சூடு வைத்து காயப்படுத்தியதாக சுப்பிரமணியன் காவல் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
விசாரணை
இதனை தொடர்ந்து விசாரணையில் சிறுவன் சொல் பேச்சை கேட்காததால் சூடு வைத்ததாக ரஞ்சிதா தெரிவித்த நிலையில் தினமும் மது அருந்திவிட்டு உண்ணிகிருஷ்ணன் சிறுவனை தாக்கியது தெரியவந்துள்ளது.
மேலும் இருவரையும் கைது செய்த பொலிஸார் சிறையில் அடைத்ததோடு சிறுவனை தந்தை சுப்ரமணியனுடன் அனுப்பி வைத்தனர்.