பிரிட்டிஷ் கொலம்பியாவில் என்.டி.பி கட்சிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி
பிரிட்டிஷ் கொலம்பியாவில் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தேற்கடிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி ஆட்சி இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை சமர்ப்பித்திருந்தது.
எதிர்க்கட்சித் தலைவர் ஜான் ரஸ்டாட் முன்வைத்த இந்த தீர்மானம், கட்சி வரிசைப்படி நடந்த வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது.
அனைத்து கன்சர்வேடிவ் உறுப்பினர்களும் ஆதரித்து வாக்களித்த நிலையில், பசுமை கட்சி உறுப்பினர்கள் இருவரும் என்.டி.பி கட்சியுடன் இணைந்து எதிர்த்தனர்.
எங்கள் மாகாணம் இதுவரை இல்லாத அளவுக்கு தளர்ந்த நிலையில் உள்ளது எனவும், பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது எனவும் மக்கள் முதலீடு செய்யும் நம்பிக்கையை இழந்துள்ளனர்" எனவும் ரஸ்டாட் தெரிவித்துள்ளார்.
இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தால், அரசு கலைந்து, மாகாண தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும்.
"இந்த தீர்மானம் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் பிரிட்டிஷ் கொலம்பியாவை தேவையற்ற தேர்தலுக்குள் இட்டுச் செல்லும்" என நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியடைந்ததை தொடர்ந்து, பிரிட்டிஷ் கொலம்வியாவின் வீடமைப்பு அமைச்சர் ரவி கஹ்லோன், தெரிவித்துள்ளார்.
பிரிட்டிஷ் கொலம்பியா முதல்வர் டேவிட் எபி, "தொடர்பில்லாத தீர்மானத்தில் நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பை கொண்டு வரும் கன்சர்வேடிவ் கட்சியின் முயற்சி விசித்திரமானது" என்று குற்றம்சாட்டினார்.
நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக 47 வாக்குகளும் எதிராக 44 வாக்குகளும் அளிக்கப்பட்டன.