வீட்டை மொத்தமாக பெயர்த்து வேறிடத்துக்கு மாற்ற முயன்ற கனேடியருக்கு அபராதம்
கனடாவில் வீடு ஒன்றை அப்படியே பெயர்த்தெடுத்து வேறு இடத்துக்கு மாற்றும் முயற்சியில் இறங்கிய ஒருவருக்கு 5,000 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வின்னிபெக் பகுதியில், தன்னுடைய வீட்டை பெயர்த்து வேறிடத்துக்கு மாற்றும் முயற்சியில் இறங்கினார் ஒருவர். அப்போது, அந்த வீட்டைக் கொண்டு செல்ல இடைஞ்சலாக இருந்ததற்காக பல மரங்களை வெட்டியுள்ளார்கள் அந்த வீட்டை மாற்றும் பணியாளர்கள்.
மொத்தத்தில் 18 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன, 12 மரங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
ஆகவே, அனுமதியின்றி மரங்களை வெட்டியது மற்றும் சேதப்படுத்தியதற்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்ட ஒருவருக்கு 5,000 டொலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் மரங்களுக்கு சேதம் ஏற்படாத வகையில் அந்த வீட்டை எப்படி அகற்றுவது என்று ஆலோசிப்பதற்காக வின்னிபெக் வனத்துறை அலுவலர்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள்.