அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள நீதிமன்றில் சைபர் தாக்குதல்
அமெரிக்காவின் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள நீதிமன்றில் சைபர் தாக்குதல் காரணமாக லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் மூடப்பட்டதாக அந்நாட்டு செய்திகளில் வெளியாகியுள்ளன.
இந்த லிடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இங்கு மொத்தம் 36 விசாரணை நீதிமன்றங்கள் இயங்கி வருகின்ற நிலையில் அங்குள்ள கணினிகள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது. அதனால் அங்குள்ள அனைத்து கணினிகளும் செயலிழந்துள்ளன.
இதைத் தொடர்ந்து, பொதுமக்களின் தரவுகளைப் பாதுகாக்க லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் உடனடியாக மூடப்பட்டது.
சைபர் கிரைம் பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாட்டின் மிகப்பெரிய விசாரணை நீதிமன்றத்தில் சைபர் கிரைம் தாக்குதல் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் உலகளவில் மைக்ரோசாப்ட் செயலிழந்ததற்கும் இதற்கும் தொடர்பில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.