கனடாவில் சைபர் தாக்குதல் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
கனடாவின் அசராங்க நிறுவனங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கனடாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், சைபர் தாக்குதல்களுக்கான சாத்தியங்கள் அதிகமாக காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சைபர் பாதுகாப்பு குறித்த கனடிய நிலையம் மற்றும் தொடர்பாடல் பாதுகாப்பு நிறுவனம் என்பன இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளன.
அரசாங்க மற்றும் முக்கியமான உட்கட்டுமான இணைய தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்படக்கூடிய அபாயம் அதிகம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் ஜனாதிபதியின், கனடிய விஜயத்தை மையப்படுத்தி சைபர் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அண்மைக் காலமாக சைபர் தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.