முத்தத்தால் சர்ச்சையில் சிக்கிய தலாய்லாமா; மன்னிப்பு கேட்டார்!
திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா, சிறுவன் ஒருவனின் உதட்டில் முத்தமிடும் காணொளியால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அந்த வீடியோவில் தனது காலில் விழுந்த சிறுவனுக்கு உதட்டில் முத்தம் கொடுக்கும் தலாய்லாமா பின் தனது நாக்கை நீட்டி சிறுவனது நாக்கை அதில் படுமாறு வைக்கச் சொல்கிறார்.
இணையவாசிகள் கடும் கண்டனம்
இந்நிலையில் ஆன்மீகத் தலைவர் தலாய்லாமாவின் காணொளி இளையங்களில் பரவி வரும் நிலையில் அவர்து இந்த செயலுக்கு இணையவாசிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
If you as a parent of this child were there, you should’ve pulled your child away after the first kiss. Assuming you couldn’t, you should’ve got up after the second & punched the man right in the face. If you didn’t, your child deserves a better parent.pic.twitter.com/rIjADTSajQ
— Jas Oberoi | ਜੱਸ ਓਬਰੌਏ (@iJasOberoi) April 9, 2023
அதேவேளை இதற்கு முன் 2019 ஆம் ஆண்டு, தனக்குப் பின் தலாய்லாமாவாக ஒரு பெண் வந்தால் அவர் மிக அழகாக இருக்க வேண்டும் என தலாய்லாமா பேசியது சர்ச்சையானதை அடுத்து தலாய்லாமா மன்னிப்பு கேட்டார்.
இந்நிலையில் தலாய்லாமாவின் இந்த செயல் பல்வேறு தரப்பினரிடையே கடும் கண்டங்களைப் பெற்று வருகிறது.
தலாய்லாமா மன்னிப்பு
சிறுவனுடன் தலாய்லாமாவின் செயலுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் கண்டனங்கள் எழுந்த நிலையில் தலாய்லாமா மன்னிப்பு கேட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
‘என் செயல் காயப்படுத்தி இருந்தால் தான் அதற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், சிறுவன் என்ற முறையில் விளையாட்டுத் தனமாக கிண்டல் செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது இடம், கேமரா முன் அப்பாவி, விளையாட்டுத்தனமாக தான் செயல்படுவது வழக்கம்’ எனவும் தலாய்லாமா, விளக்கம் அளித்துள்ளார்.