பிரான்ஸில் உள்ள தீவுக்கு ஏற்படவுள்ள ஆபத்து!
பிரான்ஸ் நாட்டிற்கு சொந்தமான தீவு ஒன்று கடலில் மூழ்கும் ஆபத்தில் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Guadeloupe தீவுக்கு அருகே இருக்கும் Îlet Caret எனும் சிறு தீவு ஒன்றே கடலில் மூழ்கும் அபாயத்தில் உள்ளது.
அதன்படி கடந்த சில நாட்களாக கடல் நீர் மட்டம் உயர்வடைந்து செல்வதை அடுத்து, இந்த தீவு முற்றாக மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
20 மீற்றர் அகலமும், 120 மீற்றம் நீளமும் கொண்ட இந்த சிறிய தீவு, கடல் விலங்குகள் ஓய்வுக்காக பயன்படுகிறது. வெள்ளை மணல் திட்டு போல் காட்சியளிக்கும் இந்த தீவைச் சுற்றி கண்ணாடி போன்று நீல நிற தண்ணீர் உள்ளது.
மேலும் சுற்றுலாப்பயணிகள் அதிகமாக வரும் இத்தீவின் கரைகள் தற்போது மெதுவாக குறைவடைந்து வருகிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.