டேவிட் அட்டன்பரோவின் 100-வது பிறந்தநாள்; மன்னர் மற்றும் ராணி வாழ்த்து
உலகப் புகழ்பெற்ற இயற்கை ஆர்வலரும், புகழ்பெற்ற ஒளிபரப்பாளருமான டேவிட் அட்டன்பரோ ( David Attenborough) தனது 100-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு பிரித்தானிய அரச குடும்பத்தினர் அவருக்கு ( David Attenborough) வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மன்னர் மற்றும் ராணி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “உங்களது இந்தச் சிறப்புமிக்க பிறந்தநாள் கொண்டாட்டத்தை இன்று மாலை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்” எனத் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் டேவிட் அட்டன்பரோவின் ( David Attenborough) பழைய நிழற்படங்களையும் அவர்கள் பகிர்ந்துள்ளனர்.
இதேவேளை, அட்டன்பரோவின் 100-வது பிறந்தநாளைக் சிறப்பிக்கும் வகையில், நேற்று மாலை லண்டனில் உள்ள ராயல் ஆல்பர்ட் ஹாலில் (Royal Albert Hall) பிரம்மாண்ட இசை கச்சேரி மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
நூறு ஆண்டுகளைக் கடந்தும் இயற்கையின் மீதான தனது தீராத காதலால் உலகையே வியக்க வைத்து வரும் டேவிட் அட்டன்பரோவுக்கு உலகம் முழுவதிலுமிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.