கனடா எல்லையில் ஆறு பேர் சடலங்களாக கண்டெடுப்பு
கனடா அமெரிக்க எல்லையில், ஒரு குழந்தை உட்பட ஆறு பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் கனடாவும் அமெரிக்காவும் புலம்பெயர்வோர் எல்லை கடக்கும் பகுதி ஒன்றை மூடியதைத் தொடர்ந்து, வேறு வழியாக புலம்பெயர்வோர் எல்லை கடக்க முயற்சி செய்யலாம், அது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என புலம்பெயர்வோர் ஆதரவு அமைப்புகள் தெரிவித்துவருகின்றன.
இந்நிலையில், கனடா அமெரிக்க எல்லையில், ஒரு குழந்தை உட்பட ஆறு பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
AP
கியூபெக்கிலுள்ள St. Lawrence நதியோரமாக இந்த ஆறு பேரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவர்கள் புலம்பெயர்வோரா என்பது உறுதிசெய்யப்படவில்லை.
உயிரிழந்த ஆறுபேரில் ஒரு குழந்தையும் அடங்கும். அந்தக் குழந்தைக்கு மட்டும் கனடா பாஸ்போர்ட் உள்ளது. மற்றவர்கள் எந்த நாட்டவர்கள் என்பதை இப்போதைக்கு தெரிவிக்கமுடியாது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் எதனால், எப்போது உயிரிழந்தார்கள் என்பதைக் கண்டுபிடிப்பதற்காக உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
The Akwesasne Mohawk பகுதி பொலிசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.