கனடாவில் இடம் பெற்ற விமான விபத்து; இருவர் உயிரிழப்பு
கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தில் இடம்பெற்ற விமான விபத்து சம்பவம் ஒன்றில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
சிறிய ரக விமானம் ஒன்று இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது என கணடிய போலீசார் தெரிவிக்கின்றனர்.

69 மற்றும் 65 வயதுடைய இரண்டு ஆண்கள் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர் விபத்து இடம் பெற்றபோது இந்த இருவர் மட்டுமே விமானத்தில் பயணம் செய்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
அல்பர்ட்டாவின் டிட்ஸ்பரி பகுதியில் இடம்பெற்ற இந்த விமான விபத்து சம்பவம் தொடர்பில் கனேடிய போக்குவரத்து பாதுகாப்பு சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த விபத்து தொடர்பில் தகவல்களை திரட்டுவதற்கும் அந்த இடத்திற்கு நேரில் செல்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கனேடிய போக்குவரத்து பாதுகாப்புச் சபை தெரிவித்துள்ளது.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        