கனேடிய நகரமொன்றில் துப்பாக்கிச்சூட்டில் ஐந்து பேர் பலி: தாக்குதல்தாரி சுட்டுக்கொலை
கனேடிய நகரமொன்றில் நடந்த பயங்கர துப்பாக்கிச்சூட்டில் ஐந்து பேர் பலியாகியுள்ளார்கள்.
ஒன்ராறியோ மாகாணத்தில், ரொரன்றோவுக்கு 18 மைல் வடக்கே அமைந்துள்ள Vaughan நகரில், நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.
அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடப்பதாக தகவலறிந்த பொலிசாரும் அவசர உதவிக்குழுவினரும் அங்கு விரைந்துள்ளனர்.
Image: @TracyTongTV/Twitter)
இந்த அதிர்ச்சியளிக்கும் சம்பவத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளதாக யார்க் பகுதி பொலிஸ்துறைத் தலைவரான Jim MacSween தெரிவித்துள்ளார்.
தாக்குதல்தாரி பொலிசார் மீதும் தாக்குதல் நடத்திய நிலையில், பொலிசாருடனான மோதலில் தாக்குதல்தாரி சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல்தாரி மற்றும் உயிரிழந்தவர்கள் குறித்த எந்த விவரங்களும் வெளியாகவில்லை.
Image: @TracyTongTV/Twitter