ஜார்ஜ் ப்ளாயிட் மரணம் ; வழக்கு விசாரணையையொட்டி நீதி கேட்டு போராட்டம்
ஜார்ஜ் ப்ளாயிட் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையையொட்டி அமெரிக்காவில் நிறவெறி தாக்குதலுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. கடந்த வருடம் மே மாதம் 25 ஆம் திகதி அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத் தலைநகர் மின்னெபொலிஸில், 46 வயதான ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற அமெரிக்க கருப்பினத்தவர் பொலிசார் ஒருவரால் கழுத்து நெறிக்கப்பட்டு உயிரிழந்தார்.
அடுத்த சில நாட்களில் ஜார்ஜ் பிளாய்ட் கொலைக்கு காரணமானவர் டெரொக் சாவ் என்பதும் அவர் ஜார்ஜை கீழே தள்ளி அவரின் கழுத்தில் தன் முட்டியால் அழுத்தி கொலை செய்த வீடியோ காட்சியும் சமூக வலைதளங்களில் வெளியானது. இதனையடுத்து அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் வெடித்ததுடன் இந்த சம்பவம் அமெரிக்கா மட்டுமின்றி சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இதில் தொடர்புடைய முன்னாள் காவலர் டெரோக் சாவ்விடம் மின்னிசோடா பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
அதனையொட்டி நீதிமன்றத்திற்கு வெளியே ஜார்ஜ் ப்ளாயிட் மரணத்திற்கு நீதி கேட்டும், நிறவெறி தாக்குதல்களுக்கு எதிராகவும் பலர் கூடி போராட்டம் நடத்தியுள்ளனர்.