காஷ்மீர் தாக்குதலில் திருமணமாகி ஒரே வாரத்தில் கணவனை பறிகொடுத்த பெண்; மனதை உலுக்கும் புகைப்படம்
இந்தியாவின் காஷ்மீரின், பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 28 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த தாக்குதலில் அரியானாவை சேர்ந்த 26 வயதான கடற்படை அதிகாரி வினய் என்பவரும் உயிரிழந்தார்.
26 பேர் கொல்லப்பட்டனர்
உயிரிழந்த கடற்படை வீரருக்கு 7 நாட்களுக்கு முன்பு இவருக்கு திருமணமான நிலையில், தேனிலவு கொண்டாட ஜம்மு காஷ்மீர் வந்தபோது மனைவி கண்முன்னே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் அண்மையில் நடந்த மிக மோசமான பயங்கரவாத தாக்குதலாக பஹல்காமில் செவ்வாய்க்கிழமை (22) தீவிரவாதிகளால் சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் மொத்தம் 26 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
இந்நிலையில், பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், கணவனை இழந்த மனைவி அவர் அருகே செய்வதறியாது அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி பார்ப்பவரது மனங்களை உலுக்கியுள்ளது.