பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பலியானோர் எண்ணிக்கை 124 ஆக உயர்வு
பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்து வருகிற நிலையில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 124-ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக பஞ்சாப், கைபர் பக்துவா, சிந்து, பலூசிஸ்தான் உள்ளிட்ட மாகாணங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின. இதில் 3 வீடுகள் இடிந்து விழுந்தன. எனவே கட்டிட இடிபாடு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி சுமார் 116 பேர் பலியாகி இருந்தனர்.
150-க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் சிகிச்சை பலனின்றி மேலும் 8 பேர் பலியாகினர்.
இதனால் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 124-ஆக உயர்ந்துள்ளது.
கனமழையால் வீடுகளை இழந்த பலரும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது.