பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மரணமடைந்தோர் எண்ணிக்கை வெளியானது!
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 35ஆயிரத்து 693பேர் பாதிக்கப்பட்டதோடு 207பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொரோனா தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஐந்தாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 68இலட்சத்து 25ஆயிரத்து 074பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரு இலட்சத்து 32ஆயிரத்து 742பேர் உயிரிழந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, 55இலட்சத்து இரண்டாயிரத்து 108பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 11இலட்சத்து 90ஆயிரத்து 224பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 982பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.