டிசம்பர் 26 - Boxing Day;அப்படியென்ற்றால் என்ன தெரியுமா!
Boxing Day கிறிஸ்துமஸ் தினத்துக்கு மறுநாளான இன்றையதினம் உலகளவில் Boxing Day அனுசரிக்கப்படுகிறது. இந்த Boxing Day அது பல ஆண்டுகளுக்கு முன்னர் பிரிட்டனில் தொடங்கியதாக நம்பப்படுகிறது.
Boxing Day அன்று வசதியான குடும்பத்தைச் சேர்ந்தோர் ஏழை எளியோருக்குக் கிறிஸ்துமஸ் பரிசுகளைப் பெட்டிகளில் வைத்துக் கொடுப்பது வழக்கம். 'Box' என்றால் தமிழில் பெட்டி என்று பொருள். அதனாலேயே Boxing Day எனும் பெயர் உருவானது.
26ஆம் திகதி விடுமுறை
அந்த வழக்கம் பழங்காலத்தில் பணக்கார வீடுகளில் பணியாளராக வேலைசெய்வோர் கிறிஸ்துமஸ் தினம் அன்று வேலை செய்யவேண்டியிருக்கும். அதனால் கிறிஸ்துமஸ் தினத்துக்கு மறுநாளான டிசம்பர் 26ஆம் திகதேதி அவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. அன்று அவர்களுக்குப் பெட்டி நிறையப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
பணியாளர்கள் ஆற்றிய சேவைக்கு நன்றி செலுத்தும் நாளாக Boxing Day அனுசரிக்கப்படுகிறது.
அதேவேளை இன்றைய காலத்தில் Boxing Day அன்று சில நாடுகளில்
உள்ள கடைத்தொகுதிகளில் விற்கப்படும் பொருள்களுக்குச் சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன.