அமெரிக்காவில் அவசரகாலநிலை பிரகடனம்
அமெரிக்காவில் நியூயோர்க்கில் குரங்கு அம்மை நோய் தீவிரமாக பரவிவரும் நிலையில், அவசரகாலநிலை வெள்ளிக்கிழமை முதல் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்த நியூயோர்க் மேயர் கேத்தி ஹோச்சுல், குரங்கு அம்மை நோயை எதிர்கொள்வதற்கான எங்கள் தற்போதைய முயற்சிகளை வலுப்படுத்த மாநில அனர்த்த அவசரகாநிலையை நான் அறிவிக்கிறேன்.
அமெரிக்காவில் நான்கு குரங்கு அம்மை நோயாளர்களில் ஒன்று மேற்பட்டோர் நியூயோர்க் மாநிலத்தில் உள்ளனர் என தெரிவித்துள்ளார்.
விரைவான பரவலால் பாதிக்கப்பட்ட சுற்றுப்புறங்கள் மற்றும் சமூகங்களுக்கு தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை ஆளுநர் வலியுறுத்தினார்.
இந்த ஆண்டு 71 நாடுகளில் குரங்கு நோய் பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில் இதுவரை 5,189 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இதேவேளை, வியாழக்கிழன்று சான் பிரான்சிஸ்கோ நகரத்திலும் குரங்கு அம்மை நோய் பரவல் காரணமாக சுகாதார அவசரகாநிலையை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.