ரஷ்யாவை பயங்கரவாத நாடாக அறிவியுங்கள்: வலியுறுத்திய செலன்ஸ்கி
ரஷ்யாவை பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யாவை பயங்கரவாத நாடாக அறிவிக்கவும், உக்ரைன் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் ரஷ்யாவுக்கு எதிராக அதிக பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என்று அவர் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் காணொளி வாயிலாக அவர் பேசினார்.
உக்ரேனிய இராணுவம் வான், கடல் மற்றும் நிலம் ஆகிய மூன்று திசைகளிலும் ரஷ்யப் படைகளை எதிர்கொள்வதாக ஜெலென்ஸ்கி கூறினார், மேலும் உக்ரைனின் வான்வெளி பாதுகாப்பானது என்று வலியுறுத்தி தங்கள் வான்வெளியை பறக்க முடியாத பகுதி என்று அறிவித்தார்.
உக்ரைன் அதிபரின் உரையை பாராட்டிய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், உக்ரைனுக்கு ஆயுதங்கள் உள்ளிட்ட அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார்.