பிரான்ஸில் தோல்வியில் முடிந்த வாக்கெடுப்பு!
பிரான்சில், இரயில் கட்டணத்தை குறைக்க, செனட் சபையில் நேற்று வாக்கெடுக்கப்பட்டபோது அது தோல்வியில் முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுற்றுச்சூழல் மாசடைவை குறைக்கும் முயற்சியின் ஒரு அங்கமாக இரயில் கட்டணத்தை குறைக்க தீர்மானிக்கப்பட்டு வாக்கெடுக்கப்பட்டது.
அதில், இரயில் பயணச் சீட்டின் வரியில், 5.5 சதவீதம் குறைக்கலாம் எனவும், இதனால் பயணத்துக்கான செலவு குறைய, மக்கள் பலர் பொதுபோக்குவரத்தை பயன்படுத்துவார்கள் என்பதால் இந்த முடிவு கொண்டுவரப்பட்டது.
எனினும் செனட் மேற்சபையில் வலதுசாரியினர் ஆக்கிரமித்திருந்ததால் இந்த வாக்கெடுப்பு வெற்றியில் முடியவில்லை என கூறப்படுகின்றது.
அத்துடன் வரியை குறைப்பதால் எந்த ஒரு பயனில்லை என அவர்கள் தரப்பு வாதம் இருந்ததையடுத்து, இது தொடர்பாக விரைவில் மீண்டும் மற்றுமொரு வாக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.