வாங்கூவர் விமான நிலையத்தில் விமானங்கள் தாமதம்
கனடாவின் வாங்கூவர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் அல்லது வருகின்ற பயணிகள், தங்களின் விமான நிலைமையை பரிசோதிக்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
வளப் பற்றாக்குறை காரணமாக விமான அட்டவணைகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நிறுவனத்தின் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக, YVR விமான நிலையத்தில் பரவலான தாமதங்கள் ஏற்பட்டன.
விமான பாதுகாப்பு சேவை
இதனால் கனடாவின் விமான பாதுகாப்பு சேவை (CATSA) மற்றும் அமெரிக்க நுழைவுச் சோதனை பிரிவு தங்கள் சேவை நேரத்தை நீட்டித்தன.
உணவகங்கள் கூட தேவைக்கேற்ப மேலதிக நேரம் திறந்து வைக்கப்பட்டன.
விமான நிலையம் ஞாயிற்றுக்கிழமை காலை வெளியிட்ட புதுப்பிப்பில், குறைந்த பணியாளர் சிக்கல்கள் தீர்க்கப்பட்டுள்ளன எனக் கூறப்பட்டாலும், அதன் தாக்கம் தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து சில விமானங்களின் அட்டவணைகளில் மாற்றங்கள் ஏற்படலாம். எனவே, பயணத்திற்கு முன்னர் உங்கள் விமான நிறுவனத்துடன் நேரடி நிலையில் தொடர்பு கொண்டு, நிலைமையை உறுதிப்படுத்தவும் என YVR இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 18 புறப்பாட்டு விமானங்கள் தாமதமாகியும், 30 வருகை விமானங்கள் தாமதமாகியும் பதிவானது குறிப்பிடத்தக்கது.