நேபாளத்தின் முன்னாள் பிரதமரை கைது செய்யுமாறு கோரிக்கை
நேபாளத்தில் அரசிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் போது, காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் 19 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி மற்றும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரமேஷ் லேகாக் ஆகியோரைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஜென் இசட் போராட்டக் குழு இதனை வலியுறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேபாளத்தில் சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடைகளை எதிர்த்து அந்த நாட்டு இளைஞர்கள் கடந்த 8 ஆம் திகதி போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதன்போது, காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 19 பேர் பலியாகினர்.
இந்தநிலையில், குறித்த துப்பாக்கிப் பிரயோகத்திற்குத் தாம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி தொடர்ந்தும் மறுப்பு தெரிவித்து வருகிறார்.