டென்மார்க்கில் 15 வயதுக்கு உட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை
குழந்தைகளின் மனநலனைக் காக்கும் வகையில் டென்மார்க் அரசு 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதித்துள்ளது.
உலகம் முழுவதும் குழந்தைகளை சமூக ஊடகங்களின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க பல்வேறு நாடுகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் இதேபோன்ற தடையை முன்மொழிந்துள்ளது.
குழந்தைகளின் மனநலம்
சமூக ஊடகங்களால் குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரெட்ரிக்சன், 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், சமூக ஊடகங்களும், செல்போன்களும் குழந்தைகளின் குழந்தைப் பருவத்தைத் திருடுகின்றன.
இளைஞர்களிடையே அதிகரித்து வரும் மன அழுத்தம், மனச்சோர்வு மற்றும் சமூகத் தனிமை போன்றவற்றைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
சமீபத்தில் ஆஸ்திரேலிய அரசு 16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.