பிரபல நடிகர் தர்ஷன் தர்மராஜ் காலமானார்
இலங்கையின் பிரபல நடிகர் தர்ஷன் தர்மராஜ் காலமானார். 41 வயதில் தர்ஷன் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.
தர்ஷன் இலங்கையின் தமிழ் சிங்கள கலைத்துறையில் தனக்கென தனியிடத்தை தக்க வைத்துக் கொண்ட ஓர் கலைஞர் என்றால் மிகைப்படாது.
இலங்கையின் சிங்கள திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நாடகங்களில் பல முக்கிய பாத்திரங்களில் தர்ஷன் தனது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார்.
தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் தர்ஷன் விருதுகளை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திடீர் உடல் நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் சிகிச்சை பலனின்றி அவர் உயரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இறுதிக் கிரியைகள் பற்றிய விபரங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
தர்ஷனின் மறைவிற்கு கலை உலகத்தைச் சேர்ந்தவர்களும் ஏனைய துறைகளைச் சேர்ந்தவர்களும் இரங்கல்களை வெளியிட்டு வருகின்றனர்.
பிரபாகரன் என்ற சிங்களத் திரைப்படத்தின் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பாத்திரத்தில் தர்ஷன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.