இளவரசர் ஹரி மற்றும் மேர்கனை கடுமையாக விமர்சித்த டயனாவின் உதவியாளர்!
இளவரசர் ஹரி மற்றும் மேர்கன் தம்பதியர் நச்சுத்தன்மை வாய்ந்தவர்கள் என இளவரசி டயனாவின் முன்னாள் உதவியாளர் விமர்சித்துள்ளார்.
நியுசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் இளவரசர் வில்லியம்சுடன் இணைந்து பணியாற்ற முன்வந்துள்ள நிலையிலேயே இளவரசி டயனாவின் முன்னாள் உதவியாளர் போல் பரல் , ஹரியையும் மேர்கனையும் விமர்சித்துள்ளார்.
ஹரி மேர்கனை விட்டு விலகிய ஜெசிந்தா ஆர்டென்
வில்லியமின் ஏர்த்சொட் திட்டத்தில் ஜெசிந்தா ஆர்டென் இணைந்துகொண்டுள்ளார். இளவரசர் வில்லியமின் சூழல் தொடர்பான திட்டத்திலேயே ஜெசிந்தா ஆர்டென் இணைந்துகொண்டுள்ளார்.
அதேசமயம் ஹரி மேர்கன் தொடர்பான நெட்பிலிக்ஸ் தொடரில் இருந்து முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் தோன்றியிருந்த நிலையில் கடந்த சிலமாதங்களிற்கு முன்னர் தன்னை அவர் அந்த தொடரில் இருந்து விலக்கிக்கொண்டிருந்தார்.
இந்நிலையில் ஹரிதம்பதியினரை புறக்கணித்துவிட்டு இளவரசர் வில்லியமுடன் ஜெசிந்தா இணைந்துள்ளமை குறித்து டயனாவின் சமையல் உதவியாளராக இருந்த போல்பரல் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
நச்சுத்தன்மை கொண்டவர்கள்
ஹரி தம்பதியினரின் உலகம் நச்சுத்தன்மை மிக்கதாக மாறிவருவதை ஜெசிந்தா உணர்ந்துள்ளார். அவர்கள் வெறுமனே பிரபலங்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் உலகிற்கான தூதுவர்கள் இல்லை வில்லியம் கேட்டே தூதுவர்கள் என தெரிவித்துள்ள போல் பரல், இரண்டு தம்பதியினருக்கும் இடையிலான வித்தியாசத்தை பாருங்கள். ஒருவர் பிரிட்டனிற்காக தீவிரமாக பாடுபடுகின்றார். மற்றையவர் பிரபலமாக செல்வந்தராக முயல்கின்றார் எனவும் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் தொலைநோக்குடன் செயற்படுகின்றார் என தெரிவித்த இளவரசி டயானாவின் உதவியாளர், வில்லியம் கேட்டிற்கு எவ்வாறு உதவலாம் என ஜெசிந்தா சிந்திக்கின்றார் இது சிறந்த விடயம் எனவும் கூறியுள்ளார்.