போப்பின் மரணத்தை கணித்த நாஸ்ட்ராடாமஸ்?
16 ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற ஜோதிடரான நாஸ்ட்ராடாமஸ் போப்பின் மரணத்தையும், வாட்டிகனின் வீழ்ச்சியை பற்றியும் கணித்த தகவல் தற்போது அதிக கவனம் பெற்றுள்ளது.
தற்போது பரிசுத்த பாப்பரசர் போப் பிரான்சிஸின் உடல்நிலை குறித்து வாட்டிகனின் அறிவிப்பு, போப்பின் மறைவு தொடர்பில் நாஸ்ட்ராடாமஸின் கணிப்பு தற்போது பேசுபொருளாகியுள்ளது.
அடுத்த போப்பாக ரோமானியப் பிரதிநிதி
1555ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நாஸ்ட்ராடாமஸ் இன் புகழ்பெற்ற புத்தகமான "லெஸ் ப்ராபெட்டீஸ்"-ல், போர்கள், இயற்கை பேரழிவுகள், அரசியல் எழுச்சிகள் மற்றும் படுகொலைகள் பற்றி நாஸ்ட்ராடாமஸ் உலகிற்கு ஏராளமான கணிப்புகளை வழங்கியதாக கூறப்படுகின்றது.
இதற்கிடையே, போப் பிரான்சிஸின் உடல்நிலையை குறித்த நிலையி, போப்பாண்டவரின் மரணத்தை நாஸ்ட்ராடாமஸ் எழுதிய பகுதியை பலர் சுட்டிக்காட்டுகின்றனர்.
மிகவும் வயதான ஒரு போப்பாண்டவரின் மரணத்தின் மூலம், நல்ல வயதுடைய ஒரு ரோமானியப் பிரதிநிதி தேர்ந்தெடுக்கப்படுவார்" என நாஸ்ட்ராடாமஸ் கூறியுள்ளார்.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி ரோம் நகரின் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
88 வயதான போப் பிரான்சிஸ் மூச்சுக்குழாய், வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை ஆகிய தொற்றால் முதலில் பாதிக்கப்பட்டுள்ளதை கண்டறிந்த மருத்துவர்கள், போப்பின் இரண்டு நுரையீரல்களும் நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்ரார்.
இந்நிலையில் உலகவாழ் கத்தோலிக்கர்கள் போப்பின் உடல்நிலை தொடர்பில் பிரார்த்தனை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.