17 வயதில் போதைப்பொருளை எடுத்துக்கொண்டாரா இளவரசர் ஹரி?
இளவரசர் ஹரி(Prince Harry) தனக்கு 17 வயதாக இருந்தபோதே தான் போதைப்பொருட்களை எடுத்துகொண்டதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது நினைவுக்குறிப்பில் தெரிவித்துள்ள அவர், தனக்கு 17 வயதாக இருந்தபோது ஒருவரின் வீட்டில் கோகோயின் வரிசை வழங்கப்படதாக கூறியுள்ளார்.
அவர் அந்நேரத்தில் அதை பெற்றுக்கொள்ளவில்லை என்றாலும் வேறு சந்தர்ப்பத்தில் பெற்றுக்கொண்டதாக கூறினார்.
இது மிகவும் வேடிக்கையாக இல்லை எனத் தெரிவித்த அவர், அதனை பாவிப்பதால் தான் மகிழ்ச்சியாக உணரவில்லை என்றும் கூறினார்.
அதேபோல் தனது மெய்க்காப்பாளர்களாக பணிபுரியும் தேம்ஸ் காவல்துறை அதிகாரிகள் ரோந்து சென்றபோது, ஏடன் கல்லூரியின் குளியலறையில் கஞ்சா புகைத்ததாகவும் நினைவுக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.