உங்களுக்கு தெரியுமா? இன்று ஓர் அபூர்வ தினம்... 200 ஆண்டுகளுக்கு பின்பே இதுபோல் வரும்!
02.02.2022 என ஜீரோவைத்தவிர மற்ற அனைத்து இலக்கங்களும் 2 என வரும் அபூர்வ திகதியாக இன்று அமைந்துள்ளது. இதுபோன்ற அபூர்வ திகதியை இனி நாம் பார்க்க முடியாது.
உலகம் தோன்றியதில் இருந்த சில அறிவியல் நிகழ்ச்சிகளும், சில மூடநம்பிக்கைகளும் நம்மை தொடர்ந்து திகிலடைய செய்ய வைத்துக்கொண்டே இருக்கின்றன. அப்படித்தான் 2000த்தில் உலகம் அழியும் என கூறப்பட்டது.
2000ம் வருடம் கடந்துசென்றபோது அப்பாடா பிழைத்தோம் என அனைவரும் மகிழ்ந்தோம். இதையடுத்து 2012ம் ஆண்டில் டிசம்பர் 21ம் திகதிக்கு பிறகு மயன் காலண்டர் முடிவடைவதால் அன்றோடு உலகம் அழிந்துவிடும் என கூறப்பட்டது.
மயன் காலண்டரில் கூறப்பட்டிருந்த கணிப்புகள் சில உண்மையானதால் இந்த உலகம் அழிவு மேட்டரும் உண்மையாகத்தான் இருக்கும் என பல பண்டிதர்கள் விளக்கம் அளித்தனர். ஆனால் அன்றைய தினமும், மற்றைய தினங்களைப்போல கடந்து சென்றது.
இப்படி சில கதைகள் மூடநம்பிக்கைகளாக கடந்து செல்கின்றன. ஆனால் சில விஷயங்கள் வாழ்வில் அபூர்வமாக வந்து செல்கின்றன. அதுபோல்தான் கடந்த 2012ம் ஆண்டின் டிசம்பர் 12 ஆம் திகதி 12.12.12 என அனைத்து எண்களும் 12 ஆக இருந்தன.
இந்த அபூர்வ நாளுக்கு பிறகு இன்றைய நாள் 02.02.2022 என அபூர்வ நாளாக வந்திருக்கிறது. இனி வரும் சில நாட்கள் 12.02.2022, 20.02.2022, 12.12.2022 என வரும். ஆனால் அவை 2 என்ற இலக்கங்கள் மாறி மாறி வரும்.
இப்படி எல்லாமே 2 என வராது.
அதன் பின்னர் 200 ஆண்டுகளுக்கு பின்னரே 02.02.2222 என்ற திகதி வரும். எனினும் அன்றைய தினம் நாம் யாரும் இருக்கப்போவதில்லை என்பதுதான் நிதர்சனம்.