டயட் சோடா அருந்துவோர் கவனத்திற்கு….
ஒரு நாளில் ஒரு டயட் சோடா கேன் கூட குடிப்பது மிகவும் அபாயராமனது என புதிய ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
இவ்வாறு அருந்துவது அல்கஹால் சாராத கொழுப்பு கல்லீரல் நோய் (Non-Alcoholic Fatty Liver Disease – NAFLD) ஏற்படும் அபாயத்தை 60% வரை அதிகரிக்கக்கூடும் என புதிய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை, சர்க்கரை நிறைந்த பானங்களைப் பருகுவது 50% வரை அபாயத்தை உயர்த்தும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு இதுவரை வெளியிடப்படாததாக இருந்தாலும், அதன் முடிவுகள் பெர்லினில் நடைபெற்ற மாநாடொன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
அல்கஹால் சாராத கொழுப்பு கல்லீரல் நோய் என்பது மதுபானம் அருந்தாதவர்களின் கல்லீரலில் கொழுப்பு சேரும் நிலையாகும்.
இது நீண்டகாலத்தில் கல்லீரல் கடுமையாக சேதமடைதல் (cirrhosis) அல்லது கல்லீரல் புற்றுநோய் போன்ற உயிர் ஆபத்தான நிலைகளுக்குக் காரணமாகலாம்.
இது உலகளவில் கல்லீரல் புற்றுநோய்க்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக உள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் அமெரிக்காவில் அல்கஹால் சாராத கொழுப்பு கல்லீரல் நோய் விகிதம் 50% அதிகரித்துள்ளது,
தற்போது சுமார் 38% மக்களும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்க்கரை கலந்த பானங்கள் குறித்து பல ஆண்டுகளாக ஆராய்ச்சிகள் நடந்து வந்தாலும், அவற்றின் மாற்றாக விற்கப்படும் ‘டயட்’ பானங்கள் பெரும்பாலும் ‘ஆரோக்கியமானது’ என நினைக்கப்படுகின்றன.
ஆனால் எங்கள் ஆய்வு காட்டுவது, தினசரி ஒரு கேன் அளவிலும் டயட் பானங்கள் அபாயத்தை பெரிதும் அதிகரிக்கின்றன என ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளன.
மேலும், டயட் பானங்களை முறையாக அருந்துவோருக்கு கல்லீரல் நோயால் உயிரிழக்கும் அபாயமும் அதிகம் இருப்பதாகவும் ஆய்வு சுருக்கத்தில் (abstract) குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முடிவுகள், டயட் பானங்கள் ‘பாதிப்பற்றவை’ என்ற பொதுவான நம்பிக்கையை சவாலுக்கு உள்ளாக்குகின்றன.