35 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்துடன் இணைந்த மாற்றுத்திறனாளி ; கையெழுத்தால் மாறிய வாழ்க்கை

China World
By Vironika Jun 30, 2026 11:47 PM GMT
Report

சீனாவில் 35 வருடங்களுக்கு முன்பு தொலைந்த மாற்றுத்திறனாளி வாலிபர் டிஎன்ஏ பரிசோதனை மூலம் குடும்பத்துடன் இணைந்தார்.

சீனாவின் ஹெநான் மாகாணத்தைச் சேர்ந்த சிறுவன் லீ ஸெக்கிங் (வயது 4) . இந்த சிறுவன் வாய் பேசவும், காது கேட்கவும் முடியாத மாற்றுத்திறனாளி. லீ ஸெக்கிங் கடந்த 1991 ஆம் ஆண்டு தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.

35 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்துடன் இணைந்த மாற்றுத்திறனாளி ; கையெழுத்தால் மாறிய வாழ்க்கை | Disabled Man Reunites With Family After 35 Years

அப்போது விளையாட்டாக அங்கு நின்று கொண்டிருந்த ஒரு ரெயிலில் ஏறியுள்ளார். ரெயிலின் உள்ளே சென்று ஒரு இருக்கைக்கு அடியில் ஒழிந்து கொண்டு படுத்த சிறுவன் அங்கேயே அயர்ந்து தூங்கிவிட்டான். பின்னர் அந்த சிறுவன் கண் விழித்துப் பார்த்தபோது வேறு புதிய இடத்திற்குச் சென்றிருந்தான்.

லீ வாய் பேசவும், காது கேட்கவும் முடியாத மாற்றுத்திறனாளி என்பதால், அவனால் தனது ஊர் மற்றும் பெற்றோர் விபரங்களை யாரிடமும் கூற முடியவில்லை. இதனைத் தொடர்ந்து ஷென்சென் நகருக்குச் சென்ற அவனை, அங்குள்ள ஒரு உணவக உரிமையாளர் தத்தெடுத்து வளர்த்துள்ளார் .

லீ ஸெக்கிங்கிற்கு சிறுவயதிலிருந்தே தனது பெயரை தலைகீழாக எழுதும் ஒரு தனித்துவமான பழக்கம் இருந்தது. 35 ஆண்டுகள் கழித்து, தனது குடும்பத்தைத் தேடும் முயற்சியாக இணையத்தில் ஒரு தகவலைப் பகிர்ந்திருந்தார்.

அதே நேரத்தில் அவரது குடும்பத்தினரும் அவரை பல வருடங்களாகத் தேடி வந்தனர். இணையத்தில் லீ பதிவிட்ட செய்தியையும், அவர் பெயரை தலைகீழாக எழுதியிருந்த விசித்திரமான பழக்கத்தையும் அவரது சகோதரர் தற்செயலாகக் கவனித்து, அது தனது தம்பிதான் என்பதை அடையாளம் கண்டுகொண்டார்.

உடனடியாக காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அதிகாரப்பூர்வமாக டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவர் லீ ஸெக்கிங் என்பது 100% உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து ஜூன் 11 அன்று ஷென்சென் நகரில், தனது தந்தை, சகோதரர் மற்றும் சகோதரியை லீ நேரில் சந்தித்தார். காணாமல் போய் 35 வருடங்களுக்குப் பிறகு மகன் நேரில் வந்ததைக் கண்டு அவரது தந்தை கண்ணீர் விட்டு அழுத காட்சி அங்கிருந்தவர்களை நெகிழச் செய்தது .

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US