கனடாவில் இடம்பெற்ற நூதன மோசடி குறித்து எச்சரிக்கை
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் இடம்பெற்ற நூதன மோசடி தொடர்பில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
செற்கை நுண்ணறிவைக் கொண்டு கிறிப்டோ கரன்ஸி தொடர்பில் இந்த மோசடி இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் ரொறன்ரோவைச் சேர்ந்த நபர் ஒருவர் 17000 டொலர்களை இழந்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு செய்தி தளங்களின் மூலம் இந்த மோசடி இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குர்டிப் சஹப்ஹார்வல் என்ற நபரே சம்பவத்தில் ஏமாற்றப்பட்டுள்ளார்.
கிறிப்டோ கரன்சி கொடுக்கல் வாங்கல்கள் மூலம் எதிர்காலத்தில் பாரிய நன்மை ஏற்படும் என்ற வகையில் செயற்கை நுண்ணறிவைக் கொண்டு செய்திகள் உருவாக்கப்பட்டுள்ளன.
கிறிப்டோ நாணயத்தில் முதலீடு செய்வதாக எண்ணி தாம் பணத்தை வைப்புச் செய்த போதிலும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி பணம் மோசடி செய்யபப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட வருவதாகத் தெரிவிக்கப்படுககின்றது.