புரட்டிப்போட்ட பேரழிவு; நேபாளம் - சீனா எல்லையில் 1400 பேர் மாயம்!
நேபாளம் - சீனா எல்லையில் 1400 பேர் மாயமான நிலையில் தேடும் பணி தீவிரமாக முன்னெடுக்கபப்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
வடக்கு நேபாளத்தில் நேற்று திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பலரும் உயிரிழந்தனர்.

500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம்
பல வீடுகளும் கட்டிடங்களும், வாகனங்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
அதோடு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை காணவில்லை. நேபாளம் நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற பலரும் இதில் சிக்கியிருக்கிறார்கள்.
தமிழகத்திலிருந்து சுற்றுலாவுக்கு சென்ற 83 பேர் பற்றிய தகவல் கிடைக்கவில்லை. அவர்களை மீட்கும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டிருக்கிறது.
ஒருபக்கம் நேபாளம் - சீன எல்லையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி சுமார் 1400 பேர் மாயமாகியுள்ளனர்.
அந்த வகையில் நேபாளத்தில் 500 வெளிநாட்டினர் உட்பட 826 பேரும், சீனாவில் 260 வெளிநாட்டினர் உட்பட 558 பேரும் மாயமாகியிருப்பதாக அந்தந்த நாட்டு அரசுகள் அறிவித்துள்ளன.