இளைஞர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்: 21 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவந்த உண்மை
அமெரிக்காவில் இளைஞர்கள் இருவர் மாயமான சம்பவத்தில் 21 ஆண்டுகளுக்கு பின்னர் அவர்கள் பயணித்த வாகனம் மீட்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தின் புறநகர் பகுதியில் இளைஞர்கள் இருவர் மாயமாகினர். 2020 ஏப்ரல் மாதத்தில் நடந்த இச்சம்பவத்தில் இதுவரை துப்புத்துலங்காத நிலையில், மாயமானவர்கள் தொடர்பில் உண்மைகளை வெளிக்கொணரும் சமூக ஊடகவியலாளர் ஒருவர், தற்போது இந்த இளைஞர்கள் தொடர்பில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.
Jeremy Beau Sides என்ற சமூக ஊடகவியலாளர் இது தொடர்பில் கூறுகையில், இரு இளைஞர்கள் ஒரு வாகனத்துடன் மாயமான சம்பவம் தமக்கு விசித்திரமாக பட்டது எனவும், அதன் உண்மையை வெளிக்கொண்டுவர முடிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
Erin Foster(18) மற்றும் Jeremy Bechtel(17) ஆகிய இளைஞர்கள் இருவரும் கடைசியாக காணப்பட்ட இடத்திற்கு தாம் சென்று விசாரித்ததில், அப்பகுதியில் மிகப்பெரிய ஆறு ஒன்று காணப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
முதற்கட்ட முயற்சி ஒன்றும் தமது இலக்கை எட்டவில்லை எனக் கூறும் Beau Sides, ஆனால் தமது முயற்சிகள் நகர நிர்வாகத்தையும் Erin Foster என்பவரின் குடும்பத்தாரின் கவனத்தையும் ஈர்த்தது என்கிறார் இவர்.
தொடர்ந்து நகர நிர்வாகிகள் மற்றும் Erin Foster-ன் குடும்பத்தினர் அளித்த ஆலோசனைகளின் அடிப்படையில் இரண்டாவது முயற்சியில் இறங்கியதாகவும், இறுதியில் குறித்த இளைஞர்கள் இருவரும் பயணித்த வாகனத்தை மீட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பொலிசார், முன்னெடுத்த விசாரணையில், ஆற்றுக்குள் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்ட அந்த வாகனம் குறித்த இளைஞர்கள் பயணித்தது என்பது உறுதி செய்யப்பட்டது.
மேலும், மரபணு டிஎன்ஏ சோதனை மற்றும் பல் பதிவுகளுடன் சாத்தியமான ஒப்பீடுகள் முன்னெடுக்கப்பட்டாலே, கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள், மாயமான அந்த இளைஞர்களுடையது என்பதை உறுதி செய்ய முடியும் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.