முருங்கை விதைகள் எந்தெந்த நோய்களுக்கு எல்லாம் தீர்வு தரும் தெரியுமா?
Headache
Joint Pain
Blood cells
By Kishanthini
முருங்கை விதையில் அதிக அளவு சத்துக்கள் உள்ளது. முருங்கை விதை சாப்பிடுவதால் நம் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.
மேலும் முருங்கை விதை சாப்பிடுவதால் நம் உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கும்.
அந்தவகையில் முருங்கை விதைகள் எந்தெந்த நோய்களுக்கு எல்லாம் உதவும் என்று இங்கே பார்ப்போம்.
- முருங்கை விதைகளிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய்யில் 30 வகையான ஆன்டி ஆக்ஸிடென்டுகள் இருக்கின்றன. இவை செல்களை ஆரோக்கியமாக பாதுக்காக்கும்.
- முருங்கை விதையை நன்றாக காயவைத்து பொடி செய்து பாலில் கலந்து குடித்து வர உடலுக்கு நல்ல பலத்தை தரும். இரத்த சோகையை நீக்கும். இதயத்தைப் பலப்படுத்தும். நரம்புகளுக்கும், எலும்புகளுக்கும் பலப்படும்.
- ஞாபக மறதியைப் போக்கி நினைவாற்றலைத் தூண்டும் சக்தி இதற்கு உண்டு. பொடியை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
- முருங்கை விதையில் ஆன்டிஆக்ஸிடன்ட், துத்தநாகம், வைட்டமின் ஏ, சி, பி காம்ப்ளக்ஸ் ஆகிய சத்துக்கள் உள்ளன. முருங்கை விதையை அதிகமாக ஆண்மை அதிகரிக்கும் லேகியங்களில் சேர்ப்பதுண்டு.
- பெண்களுக்கு சத்துக் குறைவினால் ஏற்படும் தலைவலி, கால்களில் அடிக்கடி உண்டாகும் தசைப்பிடிப்பு ஆகியவை நாளடைவில் குணமாகும்.
- விதைகளை, நெய்யில் வறுத்து பொடித்து, பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்தால் ஆண்களுக்கு விந்தணுக்கள் அதிகரிப்பதுடன், விந்துவின் கெட்டித்தன்மை அதிகமாகும், நரம்புகள் பலப்படும்.
- முருங்கை விதையிலிருந்து சமையல் எண்ணெய் எடுக்கப்படுகிறது. இவ்விதையின் எண்ணெய்யுடன் சம அளவு கடலை எண்ணெய் சேர்த்து மூட்டு வலிக்கு தடவினால் மூட்டு வலி குணமாகிறது.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US