பிரித்தானியாவில் தீபாவளி பண்டிகையில் அசைவ உணவை விருந்தளித்த பிரதமர்! எழுந்த விமர்சனம்
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தீபாவளி பண்டிகையை ஒட்டி பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அளித்த விருந்தில் அசைவ உணவு மற்றும் மதுவகைகள் பரிமாறப்பட்டுள்ளது.
குறித்த விருந்தில் ஆட்டுக்கறி, பீர், ஒயின் ஆகிவையை பரிமாறப்பட்டது இந்துக்களின் மனதை புண்படுத்தியுள்ளதாக இந்து தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக பிரித்தானியாவில் வாழும் சில இந்து தலைவர்கள் அந்நாட்டு பிரதமரை கடுமையாக விமர்சித்தனர்.
𝐃𝐨𝐰𝐧𝐢𝐧𝐠 𝐒𝐭𝐫𝐞𝐞𝐭’𝐬 𝐃𝐢𝐰𝐚𝐥𝐢 𝐃𝐞𝐛𝐚𝐜𝐥𝐞: 𝐒𝐚𝐜𝐫𝐞𝐝 𝐂𝐞𝐥𝐞𝐛𝐫𝐚𝐭𝐢𝐨𝐧 𝐌𝐚𝐫𝐫𝐞𝐝 𝐛𝐲 𝐌𝐞𝐚𝐭 𝐚𝐧𝐝 𝐀𝐥𝐜𝐨𝐡𝐨𝐥
— INSIGHT UK (@INSIGHTUK2) November 8, 2024
This year's Diwali celebration at 10 Downing Street, hosted by PM Keir Starmer has sparked significant backlash after reports surfaced… pic.twitter.com/13IB1WRJlE
சென்ற ஆண்டு நடந்த தீபாவளி கொண்டாட்டத்தில் பிரித்தானியாவின் பிரதமராக இருந்த ரிஷி சுனக் அளித்த விருந்தில் அசைவம் மற்றும் மது வகைகள் பரிமாறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தீபாவளி அன்று தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான இந்துக்கள் அசைவ உணவை உண்டு பண்டிகையை கொண்டாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.