உக்ரைன் இராணுவ வீரருக்கு உயிர்கொடுத்த மருத்துவர்; குவியும் பாராட்டுகள்!
உக்ரைன் இராணுவ வீரர் உடலில் சிக்கிய கையெறி குண்டை ஒரு மருத்துவர் பாதுகாப்பாக அகற்றியுள்ளார்.
ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு வருடத்தை நெருங்க போகிறது.
இந்த நிலையில் போர்க்கலத்தில் ஒரு உக்ரைன் மருத்துவரின் செயல் பலரது பாராட்டுகளை பெற்றுள்ளது. உக்ரைன் போரின்போது இராணுவ வீரர் ஒருவரின் மார்புகூட்டில் கையெறி வெடிகுண்டு ஒன்று சிக்கியுள்ளது.
அது எந்த நேரத்திலும் வெடித்துவிடும் என்பதால் மற்ற மருத்துவர்கள் ஒதுங்கிய நிலையில், ஒரு மருத்துவர் தைரியமாக கையெறி குண்டை சத்திர சிகிச்சை செய்து அகற்றினார்.
இந்த ஆபத்தான சூழலிலும் உயிரை பணையம் வைத்து இராணுவ வீரரை காப்பாற்றிய உக்ரைன் மருத்துவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.