மரணத்தில் செயற்கை இதயம் பொருத்தி உயிர் கொடுத்த வைத்தியர்கள்
அவுஸ்திரேலியாவில் செயற்கை இதயம் பொருத்தி உயிர் மருத்துவர்கள் மரணத்தை தடுத்து மறுவாழ்வளித்த நெகிழ்ச்சி சம்பவமொன்று நியூஸிலாந்தில் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தை சேர்ந்த 40 வயதான நபரொருவருக்கு முழுமையான செயற்கை இதயம் பொருத்தப்பட்டுள்ளது.
இதய மாற்று சத்திரசிகிச்சை
இதயநோயால் பீடிக்கப்பட்ட அந்த நபருக்கு கடந்த வருடம் நவம்பர் மாதம் 22ஆம் திகதி இதய மாற்று சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
சிகிற்சையில் இருந்து 100 நாட்களின் பின்னர் அவர் இந்த வருடம் பெப்ரவரி மாதத்தில் வீடு திரும்பியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சிட்னி நகரிலுள்ள புனித வின்சன்ட் வைத்தியசாலையின் இதய மாற்று சத்திரசிகிச்சை நிபுணர் Paul Jansz தலைமையில் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இந்ந்லையில் இதுபோன்றதொரு மைல்கல் சாதனையில் பங்குதாரராக இருந்தமை தாம் செய்த பாக்கியம் என வைத்திய நிபுணர் Paul Jansz கூறுகிறார்.