பெண்ணின் மூக்கில் இருந்து திடீரென ரத்த கசிவு... பரிசோதனையில் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்
தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 59 வயதான பெண்ணொருவரின் மூக்கிலிருந்து சுமார் 100க்கும் மேற்பட்ட புழுக்கள் இருந்ததை மருத்துவர்கள் கண்டறிந்து அகற்றியுள்ளனர்.
தாய்லாந்து வடக்கு பகுதிசை சேர்ந்த பெண், கடந்த ஒரு வாரமாக மூக்கு அடைப்பு மற்றும் முக வலியால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார்.
பிறகு, பெண்ணின் மூக்கிலிருந்து திடீரென ரத்த கசிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த பெண்ணின் குடும்பத்தினர், சற்றும் தாமதிக்காமல் அப்பெண்ணை தாய்லாந்தின் சியாங் மாயில் உள்ள நகோர்ன்பிங் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அப்போது, அந்த பெண்ணுக்கு எக்ஸ்ரே உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. எக்ஸ்ரேவை பரிசோதித்த மருத்துவர் பட்டீமோன் தனச்சாய்கான், பெண்ணின் மூக்கில் அசாதாரணமான ஒன்று இருப்பதை கண்டார்.
இதையடுத்து, பெண்ணிற்கு எண்டோஸ்கோப்பிக் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், மூக்கின் உள்ளே புழுக்கள் நெளிந்தபடி இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பிறகு, பெண்ணிற்கு சிகிச்சையின் மூலம் மூக்கின் உள்ளே இருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட புழுக்களை மருத்துவர்கள் அகற்றினர்.
சிகிச்சைக்கு பிறகு அந்த பெண் நலமுடன் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், பெண்ணிற்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டிருந்தால், கண்கள் அல்லது மூளை போன்ற அருகிலுள்ள உறுப்புகளுக்கு புழுக்கள் இடம்பெயர்ந்திருக்கக்கூடும்.
அது இன்னும் கடுமையான சிக்கலை ஏற்படுத்தி, மரணத்திற்கு வழிவகுக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.