பாசத்தில் மனிதர்களை மிஞ்சிய நாய்... நெகிழ்ச்சியை ஏற்படுத்திய காணொளி!
ஆதிகாலத்தில் இருந்து தற்போது வரையில் மனிதர்கள் தங்கள் வீட்டில் செல்லப்பிராணியாக நாய்களை வளர்த்து வருகின்றனர்.
சில நேரங்களில் மற்ற மனிதர்களிடம் அவை கடுமையாக நடந்து கொண்டாலும் தனது உரிமையாளர்களிடம் பாசத்தை காட்ட தவறுவதில்லை. அவர்களை தனது குடும்பமாகவே கருதுகிறது.
அதேபோன்ற ஒரு காணொளி சமூகவலைதளங்களில் வைரலாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அதாவது ஒரு நாய் தனது உரிமையாளரின் குழந்தை அருகே படுத்து தூங்குகிறது.
அப்போது மூத்த சகோதரனை போல அந்த நாய் குழந்தையின் வயிற்றில் படுத்துக்கொண்டு கட்டி தழுவுகிறது.
— Buitengebieden (@buitengebieden) November 20, 2024
லட்சக்கணக்கானோரின் பார்வையை பெற்றுள்ள இந்த காணொளியை பார்த்த பலரும் பாசத்தில் நாய்களை மிஞ்ச ஆள் இல்லை என்பது போன்ற பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.