நாய்களுக்கு வர்ணம் பூசி கரடியாக்கி காட்சிக்கு வைத்த பூங்கா! அதிர்ச்சியடைந்த பார்வையாளர்கள்
சீனாவில் நிஜ பாண்டாக்களுக்குப் பதிலாக நாய்களுக்கு வர்ணம் பூசி கரடியாக்கி காட்சிக்கு வைத்த வினோதம் நிகழ்ந்துள்ளது.
இந்த சம்பவம் ஷான்வேய் நகரில் உள்ள உயிரியல் பூங்காவில் நடந்துள்ளது.
பார்வைக்கு விடப்பட்டிருந்த பாண்டாக்களில் ஒன்று நாக்கை தொங்கவிட்டுக் கொண்டு மூச்சிரைக்கும் காட்சியும், திடீரென நாய்போல குரைக்கத் தொடங்கியதும் பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
அப்போதுதான் அது வர்ணம் பூசப்பட்ட நாய் என்று தெரியவந்தது. இதையடுத்து அந்த கூண்டில் இருந்த நாய்க் கரடிகளை வீடியோவாக எடுத்து பகிர்ந்து வைரலாக்கியுள்ளனர்.
NEW: China zoo forced to admit the truth after one of their “pandas” started panting and barking.
— Collin Rugg (@CollinRugg) September 19, 2024
The Shanwei zoo admits they painted dogs white and black to make them look like pandas.
The zoo initially tried claiming that the dogs were a unique breed of pandas called… pic.twitter.com/MMoQLD7zuR
குறித்த வீடியோ உள்ளூர் ஊடகங்களிலும் வெளியானதையடுத்து பூங்கா நிர்வாகம் நாய்களுக்கு பெயிண்ட் பூசிய உண்மையை ஒப்புக்கொண்டது.
சில பார்வையாளர்கள் தங்களுக்கான கட்டணத்தை திருப்பித் தர வேண்டும் என்று முறையிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.