ஏழு வயது குழந்தை கடித்துக் குதறிய ஐந்து நாய்கள்
பெல்ஜியத்தில் ஏழு வயது குழந்தை ஐந்து நாய்களால் கடித்துக் குதறியதில் குறித்து குழந்தை இறந்துள்ளது என்று மோன்ஸ் நகரில் உள்ள அரசு வழக்கறிஞர் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் நேற்று வெள்ளிக்கிழமை(10) தெரிவித்தார்.
குழந்தையை ம் கடித்துக் குதறிய நாய்கள் இறந்த குழந்தையின் குடும்பத்தினரால் வளர்க்கப்பட்டவை. பிரான்சின் எல்லையில் மோன்ஸுக்கு தெற்கே உள்ள Quévy கிராமத்தில் உள்ள குடும்பத்தின் நாய் வளர்ப்புப் பண்ணையில் வியாழக்கிழமை (9) இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அலாஸ்கன் மலாமுட் நாய்களுக்கு தாயும் ஏழு வயதுக் குழந்தையும் உணவளித்தபோது நாய்கள் கடித்துக் குதறியுள்ளன.
நாய்களிடம் இருந்த குழந்தையை தாய் விடுவித்து பலத்த காயமடைந்த மகனுக்கு முதலுதவியை தாய் அளித்தார். எனினும் அவசர சேவைப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்னர் குழந்தை இறந்துவிட்டது.
நாய்கள் ஏன் குழந்தையை தாக்கின என்பது இன்னும் தெரியவராத நிலையில் பெல்ஜியம் காவல்துறையினர் கொலை வழக்கை விசாரித்து வருகின்றனர்.