ட்ரம்பின் விருந்துக்கு செல்லாமல் இருக்க இதுதான் காரணம் ; எலான் மஸ்க்
அமெரிக்காவின் தொழில்நுட்ப ஜாம்பவான்களுக்கு அதிபர் டிரம்ப் கடந்த நேற்று முன் தினம் வெள்ளை மாளிகையில் இரவு விருந்து வைத்தார்.
இந்த சந்தர்ப்பத்தில் ஏஐ துறையில் முதலீடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.
நிறுவனத்திலிருந்து ஒரு பிரதிநிதி
மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் இதில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த விருந்தில் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் சி.இ.ஓ. எலான் மஸ்க் பங்கேற்கவில்லை. அவருக்கு அழைப்பே விடுக்கப்படவில்லை என்று ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டது.
இந்நிலையில் இதுகுறித்து ஊடகத்திற்கு கொடுத்த பேட்டியில் பேசிய மஸ்க், அதிபர் டிரம்பின் நிர்வாகத்திடமிருந்து தனக்கு அழைப்பு வந்ததாக அவர் கூறினார்.
இருப்பினும், தவிர்க்க முடியாத காரணங்களால் தான் செல்ல முடியவில்லை என்றும் தனக்கு பதிலாக தனது நிறுவனத்திலிருந்து ஒரு பிரதிநிதியை அனுப்பியதாக மஸ்க் கூறினார்.