டொனால்ட் ட்ரம்பின் சூப்பர் மேன் அவதாரம்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை, வெள்ளை மாளிகை ‘சூப்பர்மேன்’ என்று சித்தரித்து AI-உருவாக்கப்பட்ட படங்களைப் பகிர்ந்துள்ளது.
79 வயதான அவரை “நம்பிக்கையின் சின்னம்” என்று அழைத்த வெள்ளை மாளிகை, ஜேம்ஸ் கன் இயக்கிய சூப்பர்மேன் திரைப்படம் இன்று (11) வெளியானதைத் தொடர்ந்து, சூப்பர்மேன் கதாப்பாத்திரத்தில் AI-உருவாக்கிய ட்ரம்பின் படத்தை வெளியிட்டது.
நம்பிக்கையின் சின்னம் ட்ரம்ப்
அதேவேளை வெள்ளை மாளிகை அல்லது ட்ரம்ப்பால் AI-உருவாக்கப்பட்ட படங்களைப் பகிர்வது புதுமையல்ல.
கடந்த மே மாதம் போப் லியோ தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு, அமெரிக்க ஜனாதிபதி போப் போன்ற AI-உருவாக்கப்பட்ட தனது படத்தைப் பகிர்ந்து கொண்டார்.
ஒகஸ்ட் 1 முதல் கனடா இறக்குமதிகளுக்கு 35 சதவீத வரி விதிக்கப்படும் என்று ட்ரம்ப் நேற்று (10) அறிவித்தார்.
அத்துடன் ஏனைய பெரும்பாலான வர்த்தக பங்காளிகள் மீது 15 முதல் 20 சதவீதம் வரை முழுமையான வரிகளை விதிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அதேவேளை அமெரிக்க ஜனாதிபதி இதுவரை 22 நாடுகளுக்கு வரி அறிவிப்பு கடிதங்களை வெளியிட்டுள்ளார்.