1 மணி நேரம் காத்திருந்த டொனால்ட் டிரம்ப்; கிண்டலாக சிரித்த புடின்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினால் நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. புடினிடம் தொலைபேசியில் பேசுவதற்காக டிரம்ப் ஒன்றரை மணி நேரம் காத்து இருந்ததாக கூறப்படுகிறது.
டிரம்ப் உடனான தொலைபேசி உரையாடலுக்கு முன்னதாக விளாடிமிர் புடின் ஒரு நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார்.
கிண்டலாக சிரித்த புடின்
அதன் போது அவரிடம் டிரம்ப் உடன் தொலைபேசியில் பேச வேண்டிவரும் என்று கூறி உள்ளனர். ஆனால் அதை கிண்டலாக புடின் சிரித்தபடி கடந்துள்ளார். அவர் முதலில் நாம் இன்று டிரம்ப் உடன் பேச வேண்டும் என்பதையே மறந்துவிட்டார்.
ஆனால் பின்னர் நினைவு படுத்தியும் கூட.. அவர் தொலைபேசியில் பேசுவதற்கு விருப்பமோ, ஆர்வமோ காட்டவில்லை என்று கூறப்படுகிறது.
உக்ரைன் - ரஷ்யா போரை நிறுத்துவது தொடர்பாக இவர்கள் இருவரும் தொலைபேசியில் ஆலோசனை நடத்தி உள்ளனர். போரை நிறுத்துவது பற்றி நீண்ட நேரம் ஆலோசனை செய்துள்ளனர்.